openai-domain-verification=dv-tOeraF43cQwiy9UOtsvigdkU
top of page

ஒரு தாயின் அரபிய இரவு கவிதைகள்

Updated: Mar 18

ஏன் இந்த உள நடுக்கம் உன்னை தோத்தாங்கோலி பாவைச்செய்யும் சமுகத்தை உமிழ்ந்து வசவுப் பாடி உன் கை உயர்த்த வழியில்லையே என்பதாலா? யார் இந்த சமுகம் இந்த கோமாளி நாடகத்தை பாரத்தவர் ரசித்தவர் கதை, திரைக்கதை வசனம் அமைத்தவர், நடித்தவர். கோடானுக்கோடியில் பத்து நபரே நம்மை சுற்றும் பாத்திரங்கள். நீ பேசியதுக்கு எங்கோ எதிர்ப்பாட்டு கேட்கும் அனைத்தும் உன் சுவாச காற்று பிரபஞ்ச மாற்றத்தின் மிக சிறுத்துளிப்போல். நீ மட்டுமே உனக்கான நிஜம் மற்றவை மற்றவர் உன் வாழ்வை நகர்த்தும் மனித வளப் பொருட்களே. உன்னை கோப்பாக நீ நடத்துவதிலே நீ வெல்கிறாய். இங்கு நீயே பிரதானம் உன் வாழ்வின் கதை, திரைக்கதை வசனகர்த்தா. உனக்குள் உன்னை தேற்றும் ஆற்றும் போற்றும் இசை இருக்க வேண்டும் நீயே உனக்கு மகுடம் உன் அக , மன, உள எண்ண தவ மூளையில் என்றும் இருப்ப.

நீயே உன் பொருப்பாளன். உன் ஆன்ம தேக, யோக, பலம் இந்த பிரபஞ்சத்தை பிரகாசிக்கும் மாற்றும் ஏற்ற செய்யும் யுக்தி சக்தி பெற முன்னேறு

பொதுவான வாழ்வு பொதுவாக வாழ்பவருக்கு நாம் தனித்துவம் வாய்ந்தவர் நமது இடம் தடம் வாழ்க்கை ஒரு பிரகடணம்

சறுக்கள் இல்லா

வாழ்க்கையில்லை,

நமது வாழ்க்கையே

சறுக்கள்களோடு,

எதிர் நீச்சல் செய்

சதுரங்கமாடு

கோர்த்து கழிக்க பழகு

புமி சறுக்கி சழன்று

பாதை கச்சிதமாக

கொண்டது போல்

பிரபஞ்சம் முதற்கல்வி

அதனோடுஉடன்படு

புறம் ஒருப்புரம்இருக்க

ஆழ்மனதில் அழகாய்

அகம் கொண்டாடு.

அறம் பொருள் இன்பம் வீடு

பிடித்த உணவு நல்ல உடை

இடம் கல்வி வேலை

மதிப்பு பெற்றார் உற்றார்

உறவினர் காதல்

அனைத்தும்

ஒரு சேர மறுக்கப்படும்

சோதனை களமே

நமது தகுதித் தேர்வு.

நாம் இவை யாவும்

மேல் உள்ள மனித

வளம் நோக்கி பயணிக்கின்றோம்.

இந்த ஆடுகளம்

மிக கடினம்

ஆடும் கனம்

உன்னில் உன்னை அறிவாய்

நாம் தனித்துவம்

வாய்ந்தவர்

நமது உறுப்புகளுக்கு

ஆபரணம் அவசியமில்லை

எனினும் நம்மை அழித்து

நம் உறுப்புகள்

களவு போகக்கூடாது.

சுழ்நிலை சூழ்ச்சி

தட்ப வெட்ப

காலநிலையை

நாம் வெள்ள வேண்டும்.

என்றும் நம்மை

புதிது படுத்த

வேண்டும் நம்

எழுத்து சொல்

பேச்சு அனைத்தும்

மனதில் தரி

நெய்து சலித்து புடைத்து

இருக்க வேண்டும்.

இன்னல் சிக்கலை

போகட்டும் என்று

பிரிக்கும் பக்குவம்

வேண்டும்.

நாட்கள இலகுவாய்

வாழும் மேடைமனிதரை

சற்றே கொட்டி

நகர வேண்டும்.

நம்மை நம்மில்

அமர விடா

தினமும் புதுப்புது

இன்னல்கள் நுழைப்பார்கள்

எல்லா இன்னல்களும்

அதற்கான போராட்டமும்

நமதல்ல.

சில காட்சிகளை

நாம் சட்டென்று

கடக்க வேண்டும்.

நாம் நமது கருவியாகிய

மூலை எண்ணம்

செயல் நவீன

படுத்த வேண்டும்

பல திட்டம்

தீட்ட வேண்டும்

எண் எழுத்து

சொல் வரைவு

நமக்குள் இருக்க வேண்டும்

அதன் பதிவான

நமது சரிரம் அதன்

செயல் திறம் முன்னேறி செல்வது என்பது மட்டுமே இலக்கு இடைசொருகல் பரிசு தோல்வி விதி சோதிடம் எந்த அமைப்பும் நமதல்ல நமது நங்குரம் அவ்வப்பொழுது சோதனை ஓட்டம் செல்ல வேண்டும் கரை ஒதுங்க பழக வேண்டும்

அதன் செயல் திறன் காக்கப் பட வேண்டும்.

நிறைய பழகு நிலைத் தோல்விகளே நம்மை நமது திறன் அதன் கலையை மேம்படுத்தும்.

கற்றல் என்பது நாம் விடும் இடத்தை அறிவது.

தொடர் வெற்றிசாத்தியமில்லாத நாடகம் என்பதை முன்பே உணர்.

பல நாடகம் புரிந்து எப்பொழுதாவது சாப்பிடும் புளி சாதத்

தினிப்பை ஏற்காதே. உனது ஆட்ட நெருக்கடியில் சருக்க விட்டதை நேரத்தே சரி செய்

பொதுவாக பிறர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் பிறர்படி நாம் வாழக் கூடாது நமது பலம் நம்மோடு நமது தேவை பலவீனமன்று

பலவீனம் ஒன்று இரண்டு மனிதம்.

நாம் கடந்தவை மகுடமாகி நாம் முன்னேறுகையில் நம் முன் வரும்போது தளரக் கூடாது நாம்கால்கள் தரையில் இருக்க வேண்டும்

துறந்து கடிந்து வாழ்வதற்க்கு நாம் துறவிகள்அல்ல பேய்களும் அல்ல

உனது மனக் குமுறல்களை பிரபஞ்சத்துடன் இனைத்து விடு.

இழப்பதே வாழ்க்கையில்லை சேவைக்கு மட்டும் பிறக்கவில்லை அவை ஒரு அங்கம். கொஞ்சம் மிளிர்ந்திடு வென்றிடு, கொண்டாடிடு சிகரம் தொடு. உன் கைகளை உயர்த்த செய் பிறர் கையை நேரத்தே உயர்த்து.

நம் வாழ்க்கையை காலை மாலை இரவு என பகுபடுத்தல் கூடாது. காலை என்பது அடிமை இரவு என்பதுஇராப் பிச்சை மதியம் ஓர் வேலை. பிறர் திட்டப் பணியில் இருப்பினும் நமது அகம் வெல்ல வேண்டும் வெளி ஒருசக்தி நடத்தினாலும் நாம் நம் வாழ்வை இழுத்து பற்றி கட்ட வேண்டும்

மனிதன் ஒன்று கூடி

உன்னை ஒரு பொருளாக்கி

அழிக்க முடியுமா என்றால் முடியும்

செய்தார்கள் செய்கிறார்கள்

செய்வார்கள் சாத்தியமா?

சாத்தியமே இன்று மிருகம்

நாளை பிணம்தின்னிகள்

அவ்வப்பொழுது

சிறந்த கால இடைவெளியில்

உன் கொடி பறக்கட்டும்

அவ்வப்பொழுது வெல் வாழ்

உண்ணாமல் இருக்காதே உணவு என்பது சுவை சார்ந்து மட்டும் அன்று உன் உணவு நீ மான அவமானம் இன்றி ஆக்குதல்பெறுதல் வழியை அறி.

பெண்ணுக்கென்று பொது நீதி அமைத்து

பொதுவில் பலரை வாழ்த்தி

ஒன்றுக்கு தடைபோட்டு

தீயில் ஏற்றும் ஆணும் நன்றன்று

இல்லாதது பலர் முன் காட்டி

மேடையேற்றும் ஆணும் நன்றன்று

அந்த வீடும் ஊரும் நாடும் வாழாது

பெண்மையை பெண்மையில் அமர்த்து

பந்தயம் தாண்டிய வாழ்வில் வெல்லுதல் இலக்கல்ல வாழ்வது இலக்கு மனப் பிராந்துகளால் மறுக்கப்பட்ட கோப்பைக்கு போராடாதே. தொடர நகர்ந்திடு

உன் வாட்டம் அனைவர்க்கும் அனைத்து சமயத்திலும்சமுகத்திற்க்கும் உதவாது நோயும் தீராது.

உயிர் போராளியின் சேமிப்பு சொத்து மிகப் பெரிய ஆட்டத்தை மிக நாட்கள் செய்வது எளிமையில் நம்மை ஒரு வட்டத்தில் இருத்தும்

உனக்கென்று ஒரு நீர் முழ்கி கப்பல் தனித்து தொடர்பில் இருக்க வேண்டும் எப்பொழுதும் தொடர்ந்து சரக்கு கப்பல் செல்ல நீ தரையில் கட்டி இராதே.

- ஜெ . ஜெயந்தி சந்திரன்

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
You Might Also Like:
bottom of page