openai-domain-verification=dv-tOeraF43cQwiy9UOtsvigdkU
top of page

காதல்

யூத்தத்தில் சேர்ந்த

பெண் ,

ஒரு நாள் கொளு

பொம்மைகள்,

கதாநாயகிகள்,

உன் துரோகத்தோழிகள்

காதலியென

சித்தரிக்கபட்ட

கள்ளத் தாய்கள்,

யார்க்கும்

நம் கந்தர்வ கலைப்

புலப்படவில்லை.

என்னோடு

பெண் பேய்களைக்

கண்டால்

பார்வையால்

உடைத்து செல்.

காதல்

பள்ளி சொல்லி தருவதில்லை;

காமம் கள்ளத்தனம்

அந்தப்புரம் போன்று.


கதைநாயகிகள்,

இயக்குநர் அறிவதில்லை

நம்

அலைவரிசை.


தண்ணீர்

தொட்டியில்

வரிசையில்

நின்று குடம் நிரப்பி

அலங்கரிக்கும்

மாடுகள்,

மாட்டு

கொட்டடைகள்.

மதிப்பெண்

வரிசையில்

உன் ஒரு

கடைக் கண்,

கடிதம் கவிதை

தீர்த்து கட்டும்.

இது அவர்கள்

அலுவலக பதவிகள்.

இதயப் பலன் பதவி

அல்ல.


தேவன்

இந்திரர்கள்

முனிகள்

வித்வான்கள்

யாவரும்

பங்குசந்தை

வித்துநர்கள்

பார்த்தனர்

நாம்

மட்டும்

உந்தை எந்தை

என விளாவினோம்

அந்த ஆயிரத்தில்

ஒருவன்

ஒருத்தியல்ல

நாம்.

வாரித்தந்த வள்ளல்

உன் தகப்பன் போல்

மாநகர வாரியாக

காணொலித் திருமணம்

செய்திருக்கலாம்

நான் அயர்ந்துவிட்டேன்.


ஊர்வன, பரப்பன

நடப்பன, இடம்பெயர்வன

ஆரியம், திராவிடம்

பிராமணம்,

தெய்வம்,

தேவதை

எல்லோர்க்கும்

ஏவல் படி பகிர்ந்துண்டேன்

இதயம்

நிறையவில்லை.


பூமித்தொட

கடலினங்களுக்கு

உன் இரைப்

பரிமாரப்பட்டது

உண்டவருக்கு

விருது


அவர்களின்

அட்சயப்பாத்திரம்

நான்.

இருப்பினும்

அவர்கள்

உன்னை போல்

மேகலையல்ல.


நமது ஊழ்

நமது அன்பின்

உயரம்


நீ அல்லி மல்லி

தாமரை சாதி

முல்லையல்ல


வள்ளி தெய்வானை

சிரிதேவி பூதேவி

ஆண்டாள் லட்சுமி

பார்வதி சரஸ்வதி

தெய்வமன்று


ரம்பா ஊர்வசி

மேனகைப்போன்ற

அமிர்தமன்று


நீ ஏன்னவள்

உனக்கு

உழலும் மாலை


காதலி, பைங்கிளி

ஆழ்மனம்

பித்ற்றிற்று, பாடிட்று

என்று சிறு குறிப்பில்

அடக்கிவிட முடியாது


ஆகம் மட்டும்மில்லை

புறம் பெறும் பங்கு வகித்ததால்

புலநாய்வு பதிவு செய்யப்படுகிறது

நீ என் நவீன காப்பியம்.

எல்லோர்ப்போல்

உனக்கு சில

கிளத்தியல்லா

தோழித்தேவை

ஏதோ வகையில்

சிறு கூட்டம்

தேவை.

சிறையிலும்

குழுக்கள் உள்ளன

அதிகப்புறக்கனிப்பு

அற்பத்தலைமை.

நான் பந்தியள்ள

நீ வேலையாள் அல்ல

சரிபார்த்துக்

கொடுக்க எடுக்க

மண்டைபிசகுமல்ல.

இறுதியில்

பெருக்கும் வேலையும்

நமதல்ல

உன்னைக்

கொள்வதால்

தமிழ் வாழாது

அவையில் தமிழ்

ஒளிப்பதால்

உன்னை

ஒழிக்க முடியாது.


இலக்கணம் தவறினால்

இலக்கியமாகலாம்

அரசும் அறமும்

அரசிக்கோ அவைக்கோ

நீதி வழவினால்

கழகமாகும்

ஆளுமையல்ல


பார் பார்ப்பதால்

பாரா முகம்

நடுவில் நடும்

அசையா மரமல்ல

வாழ்வு நீ

மறத்தை தழவுவதால்

அறம் அரசியல்

பிழைப்பதில்லை


குதிரை கடிவாளமிட்டு

சிரிக்காமல்

போகும் செல்லும்

இடப்பக்கம் வலப்பக்கம்

நடக்கும்

நாமல்ல

விளையாடும் வானூர்தியில்

விளையாட்டு

பொம்மையாய் நான்.


சாலினி சக்தி

போன்ற மலையாள

தமிழ் மாந்திரீக

கடவுளூக்கு நேர்ந்து விட்ட

கோழியல்ல

சண்டைக் கோழி.

அடங்காத அடி

மாட்டுக்காலையன்ரு

பௌர்ணமியில்

நிலவும் சூரியனும்

விசாரிப்பதுப்போல்

பழகியவர்

நலம் பயில்வது

பண்பாகும்.

சிறப்பு தரிசனங்கள்

இறைவழியாகது

நமது ஓழக்கம் மற்றவர்

வெற்றிப்படிகட்டாகாது

ஓழக்கம் பொதுவான

காலத் தார்சு

நமக்கு

வகுக்க பட்ட

புது பந்தல்ல

பெண்ணுக்குள்

அச்சம் மடம் நாணம் பயிற்பு

போன்ற பண்பும்

செருக்கு சொக்கு அணியுமுண்டு

ரோஜாவை முள் காக்கும்

பணி வளர்க்கும்

பணி பணிவெண்பது

சிறப்புப்பண்பாகும்.

ஏனோ சில சமயம்

நம்மை

தவிர்த்து நம்மை

சேர்ந்திருப்போர்க்கு


மட்டும் நன்றியையும்

வீரத்தையும்

வாலால் காட்டும்

நாயும் தோழமையும்


பூவைசுடும், பூக்கொள்ளும்

ஆண், பெண்ணின் மாண்பு

செல்லக் கோபம்

உடையவன் உடையவள் மாண்பு


இந்த மனிதன்

மான் மயில் குயிலென்றுப்

போற்றிப் பாடினான்

இவன்

நாடி நரம்பு

ஓசையின்றி

ஓருப் பெண்ணுக்கு

நர்த்தனமிடுகிறது

என்று

எங்கள் வீட்டுக்

களிறு கதைக்கன்றது


தமிழும், திராவிடமும்

நம் பிரிவில்

ஐந்தாம் தமிழ் சங்கம்

கண்டு, விழுக்காடுகள்

உயர்த்தி

வளர்கிறது

முங்கில் போன்ற

நம் உரையாடல் போல்


நீ வெள்ளி!

விதிகளை மிராததால்.

இப்படி நான்

கதற கதற கட்டும்

சொற்களை பெற்று

நிறையானவளாய்

இருந்துவிடு


ஆலமரமாகிய பெண்ணால்

அழிபேரலை

போன்ற துயரை

உச்சி நிலவின்

குளுமையென

கடக்க முடியும்

இருப்பினும்

பெண்கள்

பிரங்கிகளிள்ளை

ஓர் நாள் அலங்கரிக்க

சவ ஊர்தியுமன்று

இறுதியில் அலங்கரிக்க

பெண்மையின்

சொல்லுக்கு

தமிழில் உனக்கு

ஏதேனும் புதிய

இலக்கண குறிப்புல்லதா?

வாரித் தந்த வள்ளல்

கலைஞரையும் பிரித்து

கழகம் வளர்த்தார்

குளத்தை தழுவி

மறந்து செல்லும்

தென்றலல்ல உறவுகள்

பிரித்தாள்வதிலில்லை

ஆட்சியும் அறமும்

ஓர் அஸ்த்திரம்

ஒரு முறைதான்

கழகங்களின்

பொம்மைகளல்ல நாம்.

மக்கள் முன்

வரும்

காட்சியில்

வாழ்க்கை வெல்வதில்லை

காதலைக் கொன்று

அரசியவளருமெனில்

அது அரசாங்கமன்றுராஜாங்கம்.


அல்லி அந்த புரத்தில்

ஆயிரம் இசைக் கருவி

வாசித்தல் காதல்

புயல் கரையை கடந்து


வாழை இலைகள் விழாக்கள்

தோரும் உண்டு

உண்ணுவது உயிர்க்கு மட்டும்

இராபிச்சைகார்களை

ஓழித்தோம்

பதுக்கி பறித்து உண்ணும்

இவர்கள் மேடையில்

ஆடையுடன்.


கை கழவ தெரிய வேண்டும்.

யானும் நீயும்

விஞ்ஞான கூடத்தின்

மாடுகளன்று

பிரிக்கப்பட்டு

குழந்தைகளை கண்டு

மகிழ

துரோகத்தை வெல்ல வேண்டும்

மோதிரம் குட்டு

வடநாட்டு கட்டுதல்

தாண்டிய

உரையில் ஊர்

வாயில் என்ன

கொள்ளி


தங்கை தமக்கை தாய்

தகப்பன்

ராஜா ராணி

மாலை மரியாதை

பள்ளக்கு

பல பெண்களுக்கு

மட்டும்

இவர்களுக்கு நாம்

முருங்கை மரம்

மாலை ஒருவன்

ஆடை ஒருவன்

மனதில் ஒருவன்

சில பெண்களுக்கு

ஆரம் ஒருவன்

வளையல் ஒருவன்

கொலுசு ஒருவன்

முதல் முறை

மயங்கினேன்

சில துளிகளில்

குந்தவிகள்

வெல்வதுமில்லை

நந்தினிகள் தோற்ப்பதுவுமில்லை

நீ

உனக்கு

ஏதேனுமுன்டா?

தீ தூது தாது துதி தத்தி தெத்தி தா

தாதி, தோது தூது தீதா

தைத்து தா தாதி.


தங்களை நிராகரிக்க

ஏதுவாகிம

காரணிகள் யாருக்கும்

உங்களுடன்

போட்டியிட்ட

யாருக்கும்

இப்போது களமிரங்கும்

நான் சற்றும் உடன்படவில்லை.


காதல் பருவம்

வருடா வருடம்

நான்கைந்து

விதங்களில்

நிலத்தை தழுவும்.


காதல் மளிகை

சாமனில்லை

போட்டித்தேர்வுமில்லை

குடும்ப பதவியுமன்று

அது

தங்கள் தேவையை

வெள்ளும்

மனவளர்சி

கட்டிலும் தொட்டிலும்

வெற்றியிலக்கல்ல


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
You Might Also Like:
bottom of page